முபாரக் காவல் மேலும் நீட்டிப்பு

எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் விசாரணைக் காவல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எகிப்து முன்னாள் அதிபர் முபாரக், தற்போது சினாய் தீபகற்பத்தில் உள்ள ஷரம் எல் ஷேக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 13ம்தேதி அவர், அவரது இரு மகன்கள் கைது செய்யப்பட்டனர். மூவரும் 15 நாள் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டனர். சமீபத்தில், ஜனவரி 25 புரட்சியில் நடந்த மக்கள் படுகொலைகளுக்கு உத்தரவிட்டவர் முபாரக் தான் என்று உண்மை கண்டறியும் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், அரசுத் தரப்பு வக்கீல் நேற்று வெளியிட்ட அறிக்கையில், விசாரணைக்காக முபாரக்கின் காவல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரிடம் விசாரணை நடத்துவதற்காக நேற்று அரசுத் தரப்பு வக்கீல்கள், ஷரம் எல் ஷேக்கிற்குச் சென்றுள்ளனர். இந்நிலையில்,பொது சதுக்கங்கள், தெருக்கள், நூலகங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்திலும், முபாரக் மற்றும் அவரது மனைவி பெயர்கள் நீக்கப்பட வேண்டும் என்று கெய்ரோ கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply