நிபுணர் குழு அறிக்கை குறித்து இலங்கையிடமிருந்து பதிலில்லை: பர்ஹான் ஹக்
நிபுணர் குழு அறிக்கை குறித்து இதுவரை எதுவித கருத்துக்களையும் இல ங்கை அரசாங்கம் வெளியிடவில்லை என்று ஐ.நா. வின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். இலங்கையின் போர் குற்றங்கள் தொடர்பான ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை அண்மையில் இலங்கை அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டிருந்தது. அதன் பின் அதில் ஒரு சில பகுதிகள் அரசாங்கத்துக்கு நெருக்கமான ஊடகமொன்றிலும் கசிய விடப்பட்டிருந்தது.
ஆயினும் தம்மிடம் கையளிக்கப்பட்டுள்ள அறிக்கை குறித்து இலங்கை அரசாங்கம் இதுவரை எதுவித கருத்துக்களையும் ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் முன் வைக்கவில்லை என்று அதன் பிரதி பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. செயலாளர் நாயகம் நியூயோர்க்குக்கு வெளியில் பல நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தில் இருப்பதும் அதற்கான காரணமாக இருக்கலாம் என்று கருத்து வெளியிட்டுள்ள அவர் எதிர்வரும் ஒரு வார காலத்துக்குள் இலங்கையின் பிரதிபலிப்பு குறித்து செயலாளர் நாயகத்திடம் அறிக்கையொன்று கையளிக்கப்படும் என்று எதிர்ப்பார்ப்பதாகவும் கருத்து வெளியிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply