அணிசேரா மாநாட்டில் கலந்துகொள்ள அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் இந்தோனேசியா பயணம்

அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் இந்தோனேசியா பயணமாகியுள்ளார்.இந்தியாவுக்கான தனது மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய அமைச்சர் பீரிஸ் நேற்று சிங்கப்பூர் பயணமானார். அங்கிருந்து அவர் இந்தோனேசியா செல்வாரென அமைச்சரின் ஊடகச் செயலாளர் கூறினார்.

இந்தோனேசியாவில் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்ளும் அதேவேளை அந்நாட்டின் முக்கியஸ்தர்களை சந்தித்து சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கை தொடர்பான இலங்கையின் நிலைப்பாடு குறித்து அமைச்சர் விளக்கமளிப்பாரெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தோனேசியாவிலிருந்து நாடு திரும்பியதும் சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கைத் தொடர்பான நிலைப்பாட்டி னை விளக்குமுகமாக அமைச்சர் சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply