TNA யின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மனோகணேசனும் இணைகிறார்
எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனநாயகமக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் ஆகியோர் இன்று கிளிநொச்சி செல்கின்றனர்.இன்று மாலை 4 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட பணிமனையில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் இவர்கள் உரையாற்றுவர்.
கூட்டமைப்பின் கிழக்குமாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், இராசெல்வராசா, கீ.லோகேஸ்வரன், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஆகியோரும் உரையாற்றுவர். கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோநோதராதலிங்கம் ஆகியோரும் உரையாற்றுகின்றனர்.
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகியோரும் உரையாற்றுவர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply