யாழ். மக்களுக்கு 20 கோடி ரூபா கடன் வழங்கும் திட்டம்

யாழ். மாவட்ட மக்களின் வாழ்வாதார நடவடிக்கையை மேம்படுத்தும் நோக்கில் கடன் வழங்கும் வேலைத் திட்டமொன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் 19-ம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவிருக்கின்றது. இதன்போது சுமார் 20 கோடி ரூபா தொகையானது 1280 பேருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வீடமைப்புக்காகவும், சுயதொழிலுக்காகவும் தலா 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபா வரையான கடன் தொகை வழங்கப்படவுள்ளது. நிர்மாணத்துறை அதிகார சபை மற்றும் இலங்கை வங்கியின் ஒத்துழைப்போடு மேற்படி கடன் திட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply