ஆஸ்லோவில் குண்டு வெடிப்பு : ஏழு பேர் பலி

நார்வே தலைநகர் ஆஸ்லோவின் மையப் பகுதியில் இடம்பெற்றுள்ள பெரும் குண்டு வெடிப்பொன்றில் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர். 15 பேர் காயமடைந்துள்ளனர். பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரச அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியில் இந்த குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு இடம் பெற்ற இடத்துக்கு அருகில் நார்வேயிலேயே பரபரப்பு செய்திகளை வெளியிடும் வீஜி என்ற பத்திரிகையின் அலுவலகமும் அமைந்துள்ளது.

நார்வே அரசு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் பிரதமர் பாதுகாப்பாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. பரந்துபட்ட அளவில் சேதங்களை ஏற்படுத்தியுள்ள இந்த குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்பது குறித்து காவல்துறையினர் இதுவரை கருத்துக்களை வெளியிடவில்லை.

தொழிற்கட்சியின் இளைஞர் பிரிவுக் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, அதனை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக பொலிசார் கூறியுள்ளனர். பொலிசாரைப் போல சீருடை அணிந்திருந்த நபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத நோர்வே ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply