போர்க் குற்றம் தொடர்பில் நியாயமான விசாரணை அவசியம்

இலங்கையின் போர்க் குற்றம்தொடர்பில் நியாயமான விசாரணை தேவை என்று சர்வதேச மன்னிப்பு சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அவுஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் கெவின் ரட்டுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இந்தக் கோரிக்கையை சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் சாலில் செட்டி விடுத்துள்ளார். போர்க் குற்றம் தொடர்பில் இலங்கை சுயமான விசாரணையை மேற்கொண்டு வருவது வெட்கத்தனமான செயல் என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
சுயாதீன விசாரணைக்காக நீண்ட நாள் காத்திருந்த நிலையில் தற்போது சர்வதேச சுதந்திர விசாரணைக்கான நேரம் வந்துள்ளதாக சுட்டிக்காட்டி கருத்துரைத்துள்ளார்.

இந்த நிலையில் தமது கோரிக்கையை சாதகமாக பரிசீலிக்க கெவின் ரட் உடன்பட்டதாகவும் செட்டி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சர்வதேச மன்னிப்பு சபையின் இந்தக் கோரிக்கை தொடர்பில் கருத்து எதனையும் கூற முடியாது என இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பேச்சாளர் லக்ஷ்மன் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply