ஆட்சி மாற்றம் ஏற்படும்வரை மக்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படாது :யாழில் ரணில்

ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை நாட்டு மக்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படாதென யாழ். மக்கள் சந்திப்பின் போது எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். யாழ். விஜயம் செய்துள்ள ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுக் காலை முதல் யாழ்.குடா நாட்டின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்தார். அவருடன் திஸ்ஸ அத்தநாயக்க, ரவிகருணாநாயக, டி.எம்.சுவாமிநாதன், ஜயலத்ஜயவர்த்தன ஆகியோருடன் யாழ். மாவட்ட எம்.பி விஜயகலா மகேஸ்வரனும் சென்றிருந்தார்.

சாவகச்சேரி, நெல்லியடி, பருத்தித்துறை, கரவெட்டி, பொலிகண்டி, தெல்லிப்பழை, மாதகல் ஆகிய நகரங்களுக்கு விஜயம் செய்த இக் குழுவினர் மக்களை சந்தித்து உரையாடினர். நேற்று மாலை மாதகலில் நடைபெற்ற கூட்டத்திலும் ரணில் விக்கிரமசிங்க உட்பட பலர் உரையாற்றினர்.

இக்குழுவினர் இன்று முல்லைத்தீவு விஜயம் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply