நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆராய்வதற்கு மற்றுமாரு ஆணைக்குழு வருகிறது

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை பரிந்துரைப்பது தொடர்பில் ஆராயும் பொருட்டு, மற்றுமொரு ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு கடந்த 2010ம் ஆண்டு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது.

இந்த ஆணைக்குழு முன்வைத்த அறிக்கையின் பரிந்துரைகளை அமுலாக்க வேண்டும் என வலியுறுத்தி, அண்மையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் அது குறித்து ஆராயும் பொருட்டு, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க தலைமையில் புதிய ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply