சைபர் தாக்குதல்களிக்கு எதிராக கூட்டணி சேரும் அமெரிக்கா – சீனா

சர்வதேச ரீதியில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ள சைபர் தாக்குதல்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்காவும் சீனாவும் முன்வந்துள்ளன.

இது குறித்து தாம் இணைந்து செயற்படவுள்ளதாக இரண்டு நாடுகளினதும் பாதுகாப்பு அமைச்சுக்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கப் பாதுகாப்பு செயலாளர் லியோன் பெனிட்டாவுக்கும், சீன பாதுகாப்பு அமைச்சர் லியான் ஆங்கிளிக்கும் இடையில் வொஷிங்டனில் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் முக்கிய ஆவணங்கள் பல சைபர் தாக்குதல்களுக்கு இலக்கானமைக்கு சீனாவே காரணம் என்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply