இறக்குமதிகளை மட்டுப்படுத்த மத்திய வங்கி தீர்மானம்!

2012 ம் வருடத்திற்கான இறக்குமதிகளை மட்டுப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால்  தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அமைய இறக்குமதி வரையறை மாற்றமடைகின்ற நிலையில், இந்த வருடம் அது 20.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய வங்கியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

2012 ம் ஆண்டின் முதல் காலாண்டில் இறக்குமதி செலவு 5.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

அதேவேளை, 2012 ம் வருடத்தின் எதிர்பார்க்கப்பட்ட 8 சதவீத பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக குறைவடையும் என மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தமது உரையில் தெரிவித்திருந்தார்.

சர்வதேச ரீதியாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக சர்வதேச நாடுகளில் பொருளாதார வளர்ச்சி இறங்குநிலையான அலகுகளையே கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடன் எதிர்காலத்தில் எவ்வாறான தொடர்புகளைப் பேணுவது என்பது குறித்து எதிர்வரும் மாதம் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அஜிட் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply