சிங்கக் கொடி விவகாரம்: கூட்டமைப்பின் கூட்டம் பிற்போடப்பட்டது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் நாளை 10ம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

இக்கூட்டம் நேற்று 8ம் திகதி நடைபெறவிருந்த போதும் தவிர்க்க முடியாத காரணங்களால் நாளைவரை பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற போது எதிர்கட்சி மே தினக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தேசியக் கொடியான சிங்கக்கொடியை அசைத்தார்.

சம்பந்தனின் இந்த செயற்பாட்டுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா பகிரங்க மன்னிப்புக் கோரினார்.

இருந்தபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் அரியனேந்திரன் உள்ளிட்டோர் தொடர்ந்தும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாளை இடம்பெறவுள்ள கூட்டத்தில் இது குறித்து கேள்வி எழுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply