சிறுவர் துஷ்பிரயோகத்தில் கொடி கட்டிப் பறக்கும் வடமாகாணம்: வவுனியா முதலிடம், யாழ் இரண்டாமிடம்

கடந்த வருடம் வட மாகாணத்தில் நடைபெற்ற சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்களில் யாழ்.மாவட்டம் இரண்டாவது இடத்தில் உள்ளதாக வட மாகாண உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.

இதேவேளை, வவுனியா மாவட்டம் முதல் நிலை வகிக்கின்றது என இந்தப் புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா மாவட்டத்தில் மொத்தம் 201 சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதுடன், யாழ் மாவட்டத்தில் சிறுவர்கள் மீதான 66 பாலியல் துஷ்பிரயோகங்கள், 12 உடலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள், 01 மனரீதியான துஷ்பிரயோகங்கள், 05 தற்கொலை முயற்சிகள், 01 தற்கொலை சம்பவம், 16 உதாசீனம், 25 சட்டத்துடன் முரண்பட்ட சம்பவங்கள், 13 தனித்துவிடப்பட்ட சம்பவங்கள், 01 சிறுவர் விற்பனை, 02 கடத்தல், 14 இளவயதுத் திருமணம் உட்பட 155 வன்முறைச் சம்பவங்கள் கடந்த வருடத்தில் நடைபெற்றுள்ளதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்களில் 3,4,5 ஆம் இடங்களை முறையே முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, ஆகிய மாவட்டங்கள் பெற்றுள்ளன.

அத்துடன், வடமாகாணத்தில் 2,097 பெற்றோரை இழந்த சிறுவர்களும், பொற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த 10,404 சிறுவர்களும் உள்ளனர் எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் ஆளுநரால் நியமிக்கப்பட்ட குழுவின் சிபாரிசுகளுக்கு அமைய பதிவு செய்யப்பட்ட 41 சிறுவர் இல்லங்களும், 29 பதிவுசெய்யப்படாத இல்லங்களும் காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளதுடன், இவற்றில் 18 சிறுவர் இல்லங்களே அனைத்து வசதிகளுடனும் இயங்குகின்றன.

19 இல்லங்கள் சீரமைக்கப்படவேண்டிய நிலையில் உள்ளன. அத்துடன், 31 சிறுவர் இல்லங்கள் மூடுவதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாகவும் வடமாகாண உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply