அமெரிக்கா பெண் ஜனாதிபதி ஒருவரை காண வேண்டும்!
தமது வாழ்நாளில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஒரு பெண் நியமனம் பெறுவதை தாம் பார்க்க வேண்டும் என அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.
எனினும் தாம் அந்த பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நிவ்யோர்க் டைம்ஸ் இணையத்தளத்தின் தகவல் படி, உயர் நிலை அரசியல் செயற்பாடுகளில் இருந்து ஹிலரி கிளின்டன் விரைவில் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
எவ்வாறாயினும், இன்னும் அமெரிக்க ஜனாதிபதியாக பெண் ஒருவர் தெரிவாவதில் தொடர்ந்தும் கடுமையான சூழ்நிலையே காணப்படுவதாக அவர் சுட்டிகாகட்டியுள்ளார்.
இதேவேளை 2016ம் ஆண்டில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் தாம் அரசியலில் இருந்து விலகிக் கொள்ளவிருப்பதாகவும், அதில் போட்டியிடும் ஆர்வம் இல்லை எனவும் ஹிலரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply