2,000ஆம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கையில் சிறுவர் – பெண்கள் மீதான துஸ்பிரயோகம் அதிகரிப்பு

இலங்கையில் கடந்த 10 வருடங்களாக சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண் துஷ்பிரயோகம் என்பன வேகமாக அதிகரித்து வருவதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

இன்று  பாராளுமன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்படி பதிவு செய்யப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் 2000ம் ஆண்டில் 928 பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன. இதேவெளை  2011ம் ஆண்டு 1450 பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் 2000ம் ஆண்டில் 1557 சிறுவர் துஷ்பிரயோகமும் 2011ம் ஆண்டில் 4029 சிறுவர் துஷ்பிரயோகமும் இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply