யாழ். அரச அதிபர் திடீர் இடமாற்றம்! ஜனாதிபதி செயலகத்தில் பணியை தொடர்வார்
யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்திற்கு அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சிலிருந்து அனுப்பப்பட்ட மின்னஞ்சல் மூலம் அவரிற்கு இடமாற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே அவரது இடத்திற்கு தற்போதைய மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் நியமிக்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்இ குடாநாட்டிற்கு விஜயம் செய்யும் இராஜதந்திரிகளை சந்திப்பது தொடர்பாக கடந்த சில தினங்களாக இமெல்டா சுகுமார் சர்ச்சைகளில் சிக்கியிருந்தார்.
குடாநாட்டிற்கு விஜயம் செய்யும் இராஜதந்திரிகள் தன்னை மட்டுமே சந்திக்க வேண்டுமென வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி வலியுறுத்தி வந்திருந்தார்.
எனினும் அவரது அழைப்புக்களை புறந்தள்ளி இராஜதந்திரிகள் பலரும் அரச அதிபரை தொடர்ந்தும் சந்தித்தே வந்திருந்தனர்.
நீண்ட காலமாக அரச அதிபருக்கும் வடமாகாண ஆளுநருக்கும் இடையில் மோதல்கள் இருந்து வந்துள்ளது. குறிப்பாக வட மாகாண ஆளுநர் அலுவகத்தில் வைத்து சந்திரசிறியினால் கடந்த 05.01..2012 மாலை 4 மணியளவில் அரச அதிபர் கடும் தொனியில் பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனை செய்தியாக வெளியிட்ட ஊடகவியலாளர் மீது அவதூறு வழக்கும் யாழ். நீதிமன்றில் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply