இந்திய சிறையில் 36 இலங்கை மீனவர்கள் – இலங்கை சிறையில் 8 இந்திய மீனவர்கள்
இந்திய மீனவர்கள் 8 பேர் இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இத்தகவலை மீன்வளத் துறை அமைச்சர் ரஜித் சேனரத்தினா தெரிவித்தார். அதேசமயம் இலங்கை மீனவர்கள் 36 பேர் தமிழகம் மற்றும் ஆந்திர சிறையில் இருப்பதாக அவர் கூறினார்.
கடல் எல்லையைத் தாண்டி மீனவர்கள் வருவது தொடர்பான பிரச்னையை பேசித் தீர்த்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று சிறிது காலத்துக்கு இலங்கை கடற்பகுதியில் மீன் பிடிக்க அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
அதேசமயம் சமீபத்தில் இந்திய கடலோரக் காவல்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட 6 இலங்கை மீனவர்களை மீட்பது தொடர்பாக பேச்சு நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மீனவர் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண இரு நாடுகளிடையே உயர் நிலைக் குழு கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply