பல்கலைக்கழக, உயர்கல்விக்கு அனுமதி பெற்றுள்ள மாணவர்களுக்கு மஹாபொல வழங்க திட்டம்

இவ்வருடத்திற்கான மஹாபொல உயர்கல்வி புலமை பரிசிலை வழங்குவதற்கு மஹாபொல புலமை பரிசில் பொறுப்புச் சபை அனுமதி அளித்துள்ளது.

இதன்படி, 2010 – 2011 கல்வி ஆண்டுக்கு பல்கலைக்கழகம் செல்ல அனுமதி பெற்றுள்ள 10,300 மாணவர்கள் மற்றும் ஏனைய உயர்கல்விக்கு அனுமதி பெற்றுள்ள 1500 மாணவர்களுக்கு மஹாபொல புலமை பரிசில் கிடைக்கும் என நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அலுவலக ஆலோசனையின்படி ஆரம்பத்தில், உயிரியல் விஞ்ஞானம், பௌதீக விஞ்ஞானம், வணிகம், கலை உள்ளிட்ட துறைகளில் பல்கலைக்கழக அனுமதி பெற்ற 25 மாணவர்களுக்கு மஹாபொல புலமை பரிசில் வழங்கப்படவுள்ளது.

ஏனைய மாணவர்களுக்கு மாவட்ட செயலாளர்கள் ஊடாக மஹாபொல புலமை பரிசில் வழங்கப்படவுள்ளதாக நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply