சுமார் 10 கோடி பெறுமதியான போதைப் பொருட்களை கடத்திய இலங்கையர் கைது

சுமார் 10 கோடி இந்திய ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்களை கடத்திய இலங்கையர் ஒருவர் கடந்த சனிக்கிழமை சென்னை மத்திய புகையிரத நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருடன் மேலும் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய சுங்க புலனாய்வுத் தரப்பினரால் கைது செய்யப்பட்ட அவர்கள், தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுகின்றனர்.

6 கிலோ எடை கொண்ட ஹெரோயின் போதைப் பொருட்களை சென்னையில் உள்ள இலங்கையர் ஒருவருக்கும் வழங்கும் பொருட்டு, நான்கு இந்தியர்கள் மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் இருந்து எடுத்து வந்துள்ளனர்.

அவர்கள் நால்வரும் முதலில் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து ஹொரோயினை கொள்வனவு செய்ய தொடரூந்து நிலையத்துக்கு அருகில் காத்திருந்த இலங்கையரும் பின்னர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இலங்கையரிடம் இருந்து 4.3 லட்சம் ரூபாய்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply