ரணில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் வேளையில் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்துள்ளனர். இவருடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இன்று ஜனாதிபதியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply