முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வெடி பொருட்கள் மீட்பு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை சீஃபோ ரக வெடி பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
புதுக்குடியிருப்பில் உள்ள காட்டுப் பகுதியொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் யுத்த சூழலின் போது அமைத்திருந்த பதுங்குகுழி ஒன்றுக்கு அருகே இந்த வெடி பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது சுமார் 6,50 கிலோ கிராம் எடையுடைய சிஃபோ ரக வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்தளவில் பெருந்தொகை சிஃபோ ரக வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களில் இருந்து புதுக்குடியிருப்புக்கு சென்ற பொலிஸ் குழுவினர் இராணுவத்தின் உதவியுடன் வெடிபொருளை கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை நந்திக்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது மேலும் ஒருதொகுதி யுத்த உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply