எதிர்கால தேர்தல்கள் 2011ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின் படி நடைபெறும்

எதிர்காலத்தில் இடம்பெறவிருக்கும் தேர்தல்களை 2011 ம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்பட்டியலுக்கு இணங்க நடத்தவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜுன் முதலாம் திகதியின் பின்னர் இடம்பெறும் தேர்தல்கள்  குறித்த பெயர்பட்டியலின் அடிப்படையில் இடம்பெறும் என செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

2011 ம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்பட்டியல்களை தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிகட்டத்தை அடைந்திருப்பதாகவும்இ எதிர்வரும் இருவாரங்களில் அதனை இறுதி செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதன்பின்னர்இ 2011 ம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல்கள் நாடளாவிய ரீதியாக மாவட்ட செயலாளர் காரியாலயங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன.

வடமத்தியஇ சபரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபை தேர்தல்களை எதிர்வரும் காலங்களில் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அவ்வாறு உரிய காலத்திற்கு முன்னர் குறித்த மாகாண சபைகள் கலைக்கப்பட்டு தேர்தல்கள் நடத்தப்படும் பட்சத்தில் அவை 2011 ம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியலின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்படும் என தேர்தல்கள் செயலகத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply