அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்தியா இதுவரை இனங்கவில்லை

ஈரானின் எண்ணெய் இறக்குமதியை குறைப்பது தொடர்பில் இந்தியா குறிப்பிடத்தக்க முயற்சிகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

அமெரிக்காவின் உயர்மட்ட தூதுவர் கர்லோஸ் பஸ்கூவல் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய அணுத் திட்டம் காரணமாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் அதன் நட்புறவு மேற்குலக நாடுகள் தடைகளை விதித்துள்ளன.

எனினும் இந்தியா மற்றும் சீனா போன்ற ஆசிய நாடுகள் ஈரானின் எண்ணெய்யை பாரியளவில் இறக்குமதி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளில் விரிசலை ஏற்படுத்தலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஈரானின் எண்ணெய் இறக்குமதியை குறைத்து கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபடும் கரோலஸ் பஸ்கூவல் இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளை இன்று சந்தித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளை சந்திக்க முன்னர் ரொய்ட்டர் செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலரி கிளிண்டன்இ ஈரானின் எண்ணெய் இறக்குமதியை குறைக்குமாறு இந்தியாவினை வலியுறுத்தியிருந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply