விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆயுத கொள்வனவில் ஈடுபட்டவருக்கு விடுதலை
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆயுத கொள்வனவு முயற்சியில் ஈடுபட்டதாக தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேடிய பிரஜையான இலங்கைத் தமிழர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ரமணன் மயில்வாகனம் என்ற நபர் அமெரிக்க நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கனடா மற்றும் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டுள்ள புலிகள் அமைப்பிற்கு ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்ட குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட ரமணன் மயில்வாகனம் என்பவருக்கு 15 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட வேண்டும் என அமெரிக்காவின் நீதித்துறை திணைக்களம் கோரியிருந்தது.
இருந்தபோதிலும் தமது குற்றத்தை ஏற்றுக்கொண்டு மனந்திருந்தியுள்ள தமது தரப்பு வாதியான ரமணன் மயில்வாகனத்தை விடுதலை செய்யுமாறு அவரது வழக்கறிஞர் தமது வாதத்தை முன்வைத்திருந்தனர்.
இந்த நிலையில் ரமணன் மயில்வாகனம் ஏற்கனவே சிறையில் தடுத்து வைக்கப்பட்ட காலத்தை அவரின் தண்டனையாக கருதி விடுதலை செய்ய நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிதி உதவி செய்த குற்றச்சாட்டில் கைதான கருணாகரன் கந்தசாமி என்ற அமெரிக்க பிரஜையும் கடந்த வாரம் நியூயோர்க் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply