பிரான்ஸின் புதிய ஜனாதிபதி இன்று பதவியேற்றார்

பிரான்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியாக ஹோலண்ட் இன்று பதவியேற்றார். அந்நாட்டில் கடந்த 17 ஆண்டுகளில் முதலாவது சோஷலிஸ்ட் அதிபர் ஹோலண்ட்தான்.

பிரான்சில் சர்கோசி அதிபராக இருந்து வந்தார். அண்மையில் நடைபெற்ற 2 கட்ட தேர்தலிலும் ஹோலண்ட்தான் வென்றார். இதையடுத்து அவர் ஜனாதிபதியாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

பாரீஸின் எல்ஷீ அரண்மனையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரான்சும் ஜெர்மனும் மிகப் பெரிய கூட்டு நாடுகள். ஜெர்மன் ஜனாதிபதி அங்கெலா மெர்கெலுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.

ஜெர்மன் பயணத்தைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்க இருக்கும் சீர்திருத்தங்கள் எவை என்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் காத்திருக்கிறது.

பிரான்சின் நிதிப் பற்றாக்குறையை எப்படி எதிர்கொண்டு அவர் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தப் போகிறார் என்பதற்கு ஆவலாக தொழில்துறையினரும் காத்திருக்கின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply