தெரிவுக் குழுவிற்கு பூரண ஆதரவு வழங்க ஐ.தே.க தயார்

நாடாளுமன்ற தெரிவுக் குழுவை பயனுள்ள கட்டமைப்பாக்குவதற்கு பூரண ஆதரவை வழங்க தயாராக இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இந்த நிலைப்பாட்டை வெளியிட்டார்.

தெரிவுக்குழு தொடர்பில் அரசாங்கம் தமது முழு அர்ப்பணிப்பை செலுத்துமாயின், எதிர்கட்சியினதும்  ஏனைய அரசியல் கட்சிகளினதும், ஆதரவினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.

எதிர்வரும், ஜுன், ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாக எதிர்கட்சி அறிவித்துள்ளது.

எதிர்கட்சித் தரப்பில் உள்ளடங்கும் அரசியல் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply