நிதி நெருக்கடி: ஜேர்மனுடன் இணைய பிரான்ஸ் தயார்

ஐரோப்பிய வலயத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கான புதிய வழிகளை ஏற்படுத்துவதில் ஜேர்மனுடன் இணைந்து செயற்படத் தயாராகவுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

ஜேர்மன்  அதிபர் ஏஞ்சலா மேர்க்கலை சந்தித்த பிரான்ஸின் புதிய ஜனாதிபதி பிராங்சுவா ஹொலண்ட் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் நடத்தப்படவுள்ள மாநாடு ஒன்றிலும் இரண்டு நாட்டுத் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

குறிப்பாக, கிரேக்கத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிகளுக்கான தீர்வு குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது.

பிரான்ஸின் புதிய ஜனாதிபதியாக நேற்றைய தினம் பதவியேற்றுக்கொண்ட பிராங்சுவா ஹொலண்ட் முதல் விஜயமாக ஜேர்மனுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply