இனவாதத்தை தோற்றுவிக்க ஒருபோதும் இடமளிக்க போவதில்லை!

இலங்கையின் மேம்பாடு மற்றும் மீளமைப்பு நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் இனவாதத்தை தோற்றுவிக்க ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடக பிரதானிகளுடன் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற சகல ரீதியிலும் இனவாதத்தை நிராகரிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் சமாதானம் மற்றும் சமத்துவத்துடன் வாழ வேண்டும் என்பதே தமது அபிலாசை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வருடம் ஒன்றிற்கு தனி நபர் ஒருவர் 26 கிலோ கிராம் கோதுமை மா உணவுகளை உள்கொள்வதில் இருந்து அதனை 16 கிலோ கிராமாக குறைப்பதே அரசாங்கத்தின் இலக்கு என அமைச்சர் பசில் ராஜபக்ச இதன்போது தெரிவித்துள்ளார்.

தற்சமயம் அரிசி அதிக அளவில் கொள்வனவு செய்வதன் மூலம் இந்த விடயத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தினால், விவசாயத்துறைக்கு வழங்கப்படும் மானியங்கள் காரணமாகவே அரிசி உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply