ராஜீவ் காந்தி தனி தமிழ் ஈழம் அமைக்க விரும்பினார்!

எல்லோரும் தமிழருடைய உரிமைக்காக தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் மாத்திரம் அல்ல, ஈழத்தில் உள்ள தமிழர்களுக்காகவும் பணியாற்றுகின்ற செயலில் ஈடுபட வேண்டும் என்பது இன்றைய தினம் என்னுடைய கோரிக்கையாகும். விரைவில் தனித்தமிழ் ஈழம் ஏற்பட நாம் அனைவரும் ஒன்றுகூடுவோம் என தி.மு.க. தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார்.
நூல் வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கருணாநிதி இவ்வாறு தெரிவித்தார். அந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

தமிழ் ஈழஇ தனி ஈழ விடுதலைக்கான, டெசோ அமைப்பு மாநாட்டை சென்னையில் விரைவில் நடத்த இருக்கிறோம். தி.மு.க. சார்பில் ஆட்சியமைக்கப்பட்டு நான் முதலமைச்சரானதும் மரியாதை நிமித்தமாக ராஜீவ் காந்தியை சந்தித்தேன். இப்போது ஒரு ரகசியத்தை நான் உங்களிடம் சொல்கிறேன்.

என்னிடம் ராஜீவ்காந்திஇபிரபாகரன் எப்படி இருக்கிறார்? என்று கேட்டார். பிரபாகரன் தலைமையில் தனித்தமிழ் ஈழம் உருவாக என்னால் ஆன உதவிகளை செய்வேன் என்று கூறினார்.

இதற்குள் ஏதேதோ தமிழ்நாட்டில் நடந்துவிட்டது. இதன் காரணமாக அந்த முயற்சி தொடரவில்லை. அந்த முயற்சி தொடர்ந்திருந்தால் ராஜீவ்காந்தியே தனித் தமிழ் ஈழத்தை பெற்றுத்தந்திருப்பார்.

வீரமணி, சுப.வீரபாண்டியன் ஆகியோரையும் இன்னும் தனி தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்று கூறுபவர்களின் ஆலோசனையையும் பெற்றுத்தான் மீண்டும் டெசோ அமைப்பை உருவாக்கியிருக்கிறோம்.

அந்த டெசோ இயக்கம் தொடர்ந்து பணியாற்ற ஈழத்தமிழகத்தை பெறுவது என்றால் ஆயுத போராட்டத்தால் அல்ல. அமைதியாக அறவழியில் எங்களை நாங்களே பலிகொடுத்துக் கொண்டாலும் கவலையில்லை. ஈழம் பற்றி அங்குள்ள தமிழர்களுக்கு மகிழ்ச்சியை உருவாக்குவோம்” என்று கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply