இலங்கை அகதிகளுக்கான நிதி உதவி அதிகரிப்பு
தமிழ்நாட்டில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு சில நலன்புரி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தமிழக அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது.
இலங்கை அகதிகளின் இயற்கைக்கு மாறான மரணங்களின்போது வழங்கப்பட்ட 15,000 ரூபா நிதியுதவியை 25,000 ரூபாவாகவும் மரண செலவீனங்களுக்கான நிதியுதவியை 2,500 ரூபாவிலிருந்து 5,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளதாக தமிழக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பொதுத்துறை கோரிக்கை தொடர்பான மானியங்கள் திணைக்களம் மீதான விவாதம் சட்டசபையில் நடைபெற்றபோதே, தமிழக அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டது.
1987ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த இலங்கை அகதிகளின் பிள்ளைகளுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என இந்திய கம்பியூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஏ.சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply