பொன்சேகாவின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதி அனோமா பொன்சேகாவுடன் பேச்சு
சரத் பொன்சேகாவின் விடுதலை குறித்து ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் மற்றும் அனோமா பொன்சேகா ஆகியோர் நேற்றிரவு ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பு டிரான் அலஸ்ஸின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் இரு தினங்களுக்குள் சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படுவார் என தான் நம்புவதாக ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.
இன்னும் சிறு சிறு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளதாகவும் அதனை இன்னும் இரு தினங்களில் தீர்த்துக் கொள்ள முடியும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய ஜனாதிபதி எவ்வித நிபந்தனைகளையும் விதிக்கவில்லை எனவும் அனைத்தும் பேச்சுவார்த்தையின் விளைவே எனவும் டிரான் அலஸ் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply