ஜீ.எல்.பீரிஸ் – ஹிலரி சந்திப்பு இன்று

வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டனை சந்திக்கவுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொண்ட ஜீ.எல்.பீரிஸ், வொசிங்டனில் இதுவரை பல்வேறு சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரனை ஒன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், இவ்வாறான சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.

இதற்கிடையில் இன்று ஹிலாரி கிளின்டனை சந்திக்கும் போது, புனர்வாழ்வு தொடர்பிலான இலங்கை அரசாங்கத்தின் செயற்திட்டம் குறித்து ஜீ.எல்.பீரிஷ் விளக்கமளிக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில் அமெரிக்காவின் வுட்ரோவ் வில்சன் சர்வதேச கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரைiயாற்றிய அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ், அமெரிக்காவுடன் நேர்மையான உறவினை முன்னெடுக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஹிலரி கிளின்டனை சந்திக்கும் போது, திறந்த மனதுடனும், தெளிவாகவும் தமது முன்னெடுப்புகள் மற்றும் நிலைப்பாடுகளை விளக்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply