யாழில் பல்கலைக்கழக மாணவன் மீது தாக்குதல்
யாழ் கொக்குவில் கலட்டிச் சந்தியில் இன்று காலை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் செயலாளர் தர்சானந்தன் இனந் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
இவர் யாழ் பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு கலைபீட மாணவன் ஆவர்.
கடந்த தினங்களில் யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்காள் நினைவுதின சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு இவர் முன்னின்று செயற்பட்டார் எனவும் அதற்கு எதிராகவே இவர் மீதுதாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று மாலை முள்ளிவாய்க்காள் படுகொலை தொடர்பாக விசேட உரை ஒன்றை நிகழ்த்த இருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவர் தலையிலும் காலிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இத் தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply