மக்கள் விடுதலை முன்னணி தெரிவுக் குழுவில் இடம்பெறாது

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான உத்தேச பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறப் போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

இந்தத் தெரிவுக்குழுவை நியமிப்பது தொடர்பாக அரசாங்கம் நேர்மையாக செயற்படாததன் காரணமாக அதில் பங்குபற்றாதிருக்க தமது கட்சி தீர்மானித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் ரில்வின் சில்வா கூறியுள்ளார்.

பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்காது காலத்தை வீணடிக்கும் முயற்சியாகவே உத்தேச பாராளுமன்ற தெரிவுக்குழுவை காண்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் குழுக்கள் நியமிக்கப்பட்டாலும் அவற்றின் ஊடாக எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை என ரில்வின் சில்வா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply