மின் பாவனையை மட்டுப்படுத்துமாறு மக்களிடம் கோரிக்கை
ஜப்பானிய மக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று அந்த நாட்டு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
நாட்டின் மின்சாரப் பாவனையை 15 வீதத்தால் கட்டுப்படுத்தும் திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் இந்த கோரிக்கையை அரசாங்கம் விடுத்துள்ளது.
ஜுலை தொடக்கம் செப்டெம்பர் மாத காலப்பகுதிக்குள் இந்த திட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஜப்பானில் பெருமளவான அணு உலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், மின்சார உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. அணு உலைகளைப் பயன்படுத்தியே ஜப்பானின் பெருமளவான மின்சார உற்பத்தி இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
30 வீதத்துக்கும் அதிகமான மின்சார உற்பத்தி அணுத் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. இருப்பினும் ஃபுகுசிமா அணு உலை விபத்தினால், ஜப்பானில் அணு உலைகள் பல மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply