ஓரினச் சேர்க்கையாளர்களின் விவாகரத்திற்கு அங்கீகாரம்

ஓரினச் சேர்க்கையாளர்களின் விவாகரத்தை அமெரிக்காவின் மேரிலாண்ட் மேன்முறையீட்டு நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.

மேரிலாண்ட் மாநிலத்தில் ஒரே பாலினத்தவர்களின் திருமணம் இதுவரை அங்கீகாரிக்கப்படாத போதிலும், விவாகரத்து பெற முடியும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கலிபோனியாவில் திருமணம் செய்த இரண்டு பெண்களில் வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏகமானதாக இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு இவர்களின் விவாகரத்து கலிபோனியாவில் நிராகரிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒரே பாலினத்தவர்களின் திருமணம் மேரிலாண்ட் மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் சட்டபூர்வமாக்கப்பட்டதுடன், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது

எனினும் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இது தொடர்பான வாக்கெடுப்பில் அதனை தோற்கடிக்க முடியும் என ஒரே பாலின திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்போர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply