பொருளாதார ஸ்திரத் தன்மையை பாதுகாக்க ஜீ எட்டு நாடுகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்

பொருளாதாரத்தில் அதிஉயர் நிலையில் உள்ள எட்டு நாடுகளின் உச்சி மாநாடு தற்சமயம் அமெரிக்க ஜனாதிபதியின் பிறிதொரு வாசஸ்தலமான காம்ப் டேவிட்டில் ஆரம்பமாகியுள்ளது.

இந்த உச்சி மாநாடு குறித்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கருத்து வெளியிடுகையில், உலக பொருளாதாரம், அதன் ஸ்திரத் தன்மை போன்றவற்றை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் எட்டு நாடுகளும் செயல்படுவதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் அமெரிக்கா, ஜேர்மனி, பிருத்தானியா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், கனடா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் தலைவர்கள் தமது ஆரம்ப கலந்துரையாடல்களை முன்னெடுத்துச் செல்கின்றனர்.

காம்ப் டேவிட்டில், ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றிய பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரோன், சர்வதேச ரீதியாக கடல் அரிப்பை தடுப்பதற்கான அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இதேவேளை, புதிதாக தெரிவான பிரெஞ் ஜனாதிபதி பிராங்கோய்ஸ் ஹொலண்டியை, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சந்தித்து உரையாடியுள்ளார்.

பின்னர் அவர் ஊடகவியலாருக்கு கருத்து தெரிவிக்கையில், புதிய பிரெஞ் ஜனாதிபதியும் தாமும் பல விடயங்களில் ஒத்த கருத்தைக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

ஐரோப்பிய மக்களின் நலனில் மாத்திரம் கவனம் செலுத்தாமல், முழு சர்வதேச சமூகத்தின் நலனில் அமெரிக்காவும் பிரான்சும் அர்ப்பணிப்புடன் செயல்படும் என்பதிலும் இணக்கம் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply