தனித் தமிழீழம் அமைய ஐநா வலியுறுத்த வேண்டும் – யுனெஸ்கோ ஆலோசகர் கோரிக்கை

யுனெஸ்கோ மையத்தின் ஆசிய பசிஃபிக் மனித உரிமைகள் மற்றும் தகவல் தொழில் நுட்ப ஆலோசகராகப் பொறுப்பேற்றுள்ள அசன் முகம்மது ஜின்னா யுனெஸ்கோ மையத்தின் செக்ரட்டரி ஜெனரல் டாக்டர். டே சுல் கிமுக்கு கருணாநிதி  கதனித்தமிழ் ஈழம் அமைய ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்த ஆவன செய்ய வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்.

அசன் முகம்மது ஜின்னா எழுதியுள்ள கடிதத்தில் :-  ”யுனெஸ்கோ மையத்தின் ஆலோசகராகப் பொறுப்பேற்றுள்ள நான், எனது முதல் பணியாகப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்கள் பற்றிய தகவல் களைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விழைகிறேன்.

உலகெங்கும் வாழும் தமிழர்கள், இலங்கையின் பூர்வீகக் குடிகளானத் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட அத்துமீறல்கள் மற்றும் கொடிய தாக்குதல்களால் மிகுந்த மனவேதனையுடன் உள்ளனர்.

தாய்த் தமிழகம் என உலகத் தமிழர்களால் பெருமையுடன் அழைக்கப்படும் எங்கள் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள மக்கள், இத்தகையக் கொடூரத் தாக்குதல்களிலிருந்து இலங்கைத் தமிழர்கள் எப்போது விடுதலையாவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஏக்கமும் கொண்டுள்ளனர்.

இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், அமைதியுடன் வாழ வழிவகை செய்ய வேண்டும் என 1956ல் நடந்த கட்சியின் பொதுக்குழுவில் அப்பொழுதே தீர்மானம் நிறைவேற்றினார் கலைஞர். இலங்கைத் தமிழர்களுக்குத் தனித் தமிழீழத் தாயகம் உருவாவதே உண்மையான விடுதலை என்பதையும் இதற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தவேண்டும் என்றும் கலைஞர் வலியுறுத்தி வருகிறார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னெடுப்பில்,  பொதுவாக்கெடுப்பு ஒன்றினை நடத்தித் தனித்தமிழீழம் அமைத்துத் தரவேண்டும் என்ற கோரிக்கை மனித உரிமைகளிலும் மனித சமுதாயத்தின் நல்லிணக்கத்திலும் நம்பிக்கை உள்ள அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாகும்.

இந்த வாக்கெடுப்பில்,  இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் உலகின் பல நாடுகளிலும் புலம் பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் மட்டுமே நடத்தப்படவேண்டும் என்பது  கலைஞரின் கோரிக்கையாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply