பீரீஸ் தகவல்களை திரிவுபடுத்தி சர்வதேசத்தை ஏமாற்றுகிறார்

வடமாகாணத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று பேராசிரியர் ஜி எல் பீரீஸ் கூறியுள்ளது உண்மையல்ல என்று கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவுக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்ட இலங்கையின் வெளியுறவு அமைச்சர் பீரீஸ் அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டனுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த போதே இதை தெரிவித்துள்ளார்.

நாட்டின் மற்ற பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 8 சதவீதம் அளவுக்கு இருக்கும் போது, போருக்கு பின்னரான காலகட்டத்தில் வடமாகாணத்தின் வளர்ச்சி 22.9 சதவீதம் வளர்ந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சரின் கருத்து தந்திரோபாயமாக புள்ளிவிபர தகவல்களை திரிபு படுத்தி, சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் வழிமுறையாகவே கருதப்பட வேண்டும்’

ஹிலாரி கிளிண்டனுடான கூட்டத்தின் போது, நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு ஒரு சில புள்ளிவிபரங்களின் அடிப்படையிலான தகவல்களையும், வடமாகணத்தை பொருத்தவரையில் வேறு சில புள்ளிவிபரங்கள் அடிப்படையிலான தகவல்களையும் வழங்கியுள்ளார் என்று கூறுகிறார் இலங்கை பொருளாதார ஆய்வாளர் டாக்டர் முத்துகிருஷ்ண சர்வானந்தன்.

இலங்கையின் மற்ற மாகாணங்களுடன் ஒப்பிடும் போது வடமாகணத்தின் பொருளாதார வளர்ச்சி 2010 ஆம் ஆண்டு கூடுதலான வளர்ச்சியை கண்டுள்ளது உண்மைதான் என்றாலும், இது புது விஷயம் அல்ல என்றும், போர் நிறுத்த காலத்தில் கூட இப்படியான ஒரு சூழல் ஏற்பட்டது எனவும் அவர் கூறுகின்றார்.

ஆனால் போர் நிறுத்த காலத்தில் ஏற்பட்ட அந்த பொருளாதார வளர்ச்சி நிலைத்து நிற்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டும் அவர்இ அதே போல் வடமாகாணத்திலும் பொருளாதார வளர்ச்சி தொடருமா என்பதும் கேள்விக்குறியே என்கிறார்.

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் வடமாகாண பொருளாதார அபிவிருத்தி தொடர்பான தகவல்களை திரிபு படுத்தி கூறுவதாகக் குற்றச்சாட்டு

ஜி எல் பீரீஸ் கூறியதில் சற்றுக் கள்ளத்தனம் இருப்பதாக தான் கருதுவதாகவும் சர்வானந்தன் கூறுகிறார்.

தற்போதைய ஆட்சியாளர்கள் அரசியல் விஷயங்கள் மற்றும் மனித உரிமை விபரங்களை திரிபுபடுத்திக் கூறும் பிரச்சார யுக்தியாகத்தான் பேராசிரியர் ஜி எல் பீரீஸின் கருத்துக்கள் உள்ளன எனவும் சர்வானந்தன் கருத்து வெளியிட்டுள்ளார்.

இலங்கை அரசு நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பொருளாதார வளர்ச்சிதான் முக்கியம் என்று பிரச்சாரம் செய்து வருகிறது, அதற்காக வெளிநாடுகளிடமிருந்தும் உதவிகளை வெளிப்படையாக கேட்டு வருகிறது, அதனை ஆதரிக்கும் முகமாக இப்படியாக திரிபுபடுத்தப்பட்ட புள்ளிவிபரங்களை வெளியிட்டு அவர்களை தவறான வழியில் நம்ப வைக்கும் நடைமுறையாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply