பென்சேகாவுக்கு அழைப்பு விடுவதா ? இன்று தெரியும்

தமது தமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சிக்குள் இணைந்து கொள்ளுமாறு எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவுக்கு அழைப்பு விடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான யோசனை ஒன்றை, இன்றைய தினம் கூடவுள்ள மத்திய செயற்குழுக் கூட்டத்தில் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய மத்திய செயற்குழுக் கூட்டத்தில் சரத்பொன்சேகாவின் விடுதலை, அவருடன் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் அரசியல் நடவடிக்கைகள் என்பன தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளன.

இதேவேளை ஜனநாயகம் தொடர்பில் தமக்கெதிராக எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கே அரசாங்கம் சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய தீர்மானித்துள்ளதாக முற்போக்கு சோசலிச கட்சியின் உறுப்பினர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply