பாகிஸ்தானில் 160 வருடங்கள் பழமை வாய்ந்த இந்துக் கோவிலுக்கு சேதம் விளைவிப்பு

வடகிழக்கு பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள இந்து கோவிலை மர்ம நபர்கள் தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மூடப்பட்டிருந்த இநத் கோவில் நீதிமன்ற உத்தரவின்பேரில் கடந்த ஆண்டு தான் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள கோரக்நாத் கோவிலை மர்ம நபர்கள் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர் என்று உள்ளூர்வாசிகளும்இ பொலிசாரும் தெரிவித்துள்ளனர். கோவிலில் இருந்த படங்களை எரித்ததோடு மட்டுமல்லாமல் அங்கிருந்த சிவலிங்கத்தை சேதப்படுத்தியுள்ளனர். மேலும் கோவிலி்ல் இருந்த சாமி சிலைகளை தூக்கிச் சென்றுள்ளனர்.

கடந்த 2 மாதங்களில் இந்த கோவில் தாக்கப்பட்டுள்ளது இது 3வது முறையாகும் என்று கோவில் பாதுகாவலர் தெரிவித்தார். இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு போட்டால் இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்கலாம் என்று இந்து மதத் தலைவர்கள் போலீசாரை வலியுறுத்தினர்.

நேற்று மாலை 6.30 மணி அளவில் கோவிலுக்கு வந்தபோது அங்கு 8 பேரைப் பார்த்ததாக கோவில் பாதுகாவலர் தெரிவித்தார். அவர்கள் சாமி சிலைகளைத் தூக்கி வீசிவிட்டுஇ அங்கிருந்த படங்கள்இ புனித நூல்களை எரித்தனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பெஷாவர் உயர் நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஆண்டு தான் இந்த 160 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோரக்நாத் கோவில் திறக்கப்பட்டது. இந்தியாஇ பாகிஸ்தான் பிரிவிணைக்குப் பிறகு அந்த கோவில் பூட்டியே கிடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply