ஐநா கூட்டத் தொடரில் ஆங் சான் சூகி உரையாற்ற தயாராகிறார்
மியன்மாரின் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூகி ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடர் ஒன்றில் உரையாற்றவுள்ளார்.
1988 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெளிநாடு ஒன்றில் ஆங் சான் சூகி உரையாற்றவுள்ள முதல் சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.
சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் வருடாந்த மாநாடு ஒன்றில் ஆங் சான் சூகி உரை நிகழ்த்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூகிக்கு அண்மையில் மியன்மார் அரசாங்கத்தால் கடவுச்சீட்டு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இராணுவ ஆட்சியாளர்களால் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தபோது ஆங் சான் சூகிக்கான உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் கடந்த மாதம் நடத்தப்பட்ட பாராளுமன்றத் தேர்தலில் ஆங் சான் சூகி வெற்றிபெற்றதை அடுத்து மியன்மாரில் ஜனநாயகம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச சமூகம் குறிப்பிட்டுவருகின்றது.
மியன்மார் நீண்டகாலமாக இராணுவ ஆட்சிக்கு உட்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply