இலங்கை பெண்களை சிங்கப்பூரிற்கு அனுப்ப வேண்டாம்!

இலங்கை பெண்களை சிங்கப்பூரிற்கு பணிப்பெண்களாக அனுப்புவதனை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திடம் வேண்டுகோள்விடுத்துள்ளது.

தமது விசாரணை பிரிவினர் ஊடாக இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி அனோமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரிற்கு பணிப் பெண்களாக செல்லும் பெண்களில் அதிகமானவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றமை தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெற்றதையடுத்து இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி அனோமா திஸாநாயக்க கூறியுள்ளார்.

இலங்கையின் பல சிறுமிகள் சிங்கப்பூரில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவங்கள் அண்மைக்காலத்தில் இடம்பெற்றமை தொடர்பிலான தகவல்கள்இ கடந்த சில தினங்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து வெளியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி அந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை சிங்கப்பூர் நோக்கி பயணிக்கும் சிறுமிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, விசாரணைகளை நடத்துமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைஇ குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் வேண்டுகோள்விடுத்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply