இலங்கை – இந்தியா ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தி இருந்தால் இலங்கை தமிழருக்கு துன்பம் இல்லை

உயிருக்கு உயிராக இருந்த, இலங்கைத் தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டி, இலங்கை – இந்தியா ஒப்பந்தத்தை ராஜிவ் கொண்டு வந்தார். அதை அனுமதித்திருந்தால், எந்த துன்பமும் இலங்கைத் தமிழர்களுக்கு வந்திருக்காது என தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ்காந்தி நினைவு தினத்தையொட்டி, நேற்று அவரது நினைவிடத்தில் இடமபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்பதே அவர் இவ்வாறுதெரிவித்துள்ளார்.

ராஜிவ் நினைவு நாள், இந்தியா முழுவதும் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அவர், 18 வயதுடையவர்களும் வாக்களிக்க நடவடிக்கை மேற்கொண்டார். இந்நன்னாளில், ராஜிவ் கண்ட கனவையும், அவர் விட்டுச் சென்ற தொழில்நுட்பப் பார்வையையும் செயல்படுத்த சபதம் ஏற்போம். இலங்கைத் தமிழர்கள் அனைத்து வசதிகளும் பெற்று, சமூக அந்தஸ்து பெற்று வாழ, நாம் பாடுபடுவோம் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply