இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல!
போர் குற்றம், மனித உரிமை மீறல் தொடர்பில் இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என கொடுக்கப்படும் அழுத்தங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்யா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுக்கும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரோவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ரஷ்ய வெளிவிவகார அமைச்சரால் இக்கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறைமை கொண்ட இலங்கையின் சம்மதமின்றி, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அனுமதி இன்றி இவ்வாறு சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தப்படுவது பிழையான முயற்சி என ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனித உரிமை மீறல் மற்றும் போர்குற்றம் தொடர்பில் இலங்கையின் உள்நாட்டுத் தயாரிப்பு ஆணைக்குழு நடசவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply