தமிழ் அரசியல் கைதிகள் உண்ணா விரதத்தை கைவிட தீர்மானம்

தங்களை விடுதலை செய்யவும் அல்லது வழக்குத் தொடரவும் என வலியுறுத்தி உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வரும் தமிழ் அரசியல் கைதிகள் தமது உண்ணாவிரதத்தை கைவிட தீர்மானித்துள்ளனர்.

இன்று மாலை 4 மணியுடன் அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிடுவர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு விளக்கமறியல் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் கைதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் இன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

கைதிகளின் பிரச்சினைக்கு ஒரு மாதத்தில் தீர்வு காணப்படும் என அரச தரப்பு உறுதி அளித்துள்ளதால் அதுவரை உண்ணாவிரதத்தை கைவிடுவது குறித்து சுமந்திரன் சிறை கைதிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போதே கைதிகளுடன் இந்த இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டதாகவும் அதன்படி இன்று மாலை 4 மணிக்குப் பின்னர் உண்ணாவிரதம் கைவிடப்படும் எனவும் தமிழித் தேசியக் கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply