பாடசாலை மாணவர்களுக்கான பால் வழங்கும் திட்டம் கைவிடும் நிலை

நுவரெலியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த பாடசாலை மாணவர்களுக்கான பால் வழங்கும் வேலைத்தை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தகவலை அம்பகமுவ பிரதேச செயலாளர் ரோஹண புஸ்பகுமார வெளியிட்டுள்ளார்.

பால் உற்பத்தியாளர்களிடமிருந்து அரசாங்கம் 50 ரூபா விலையில் ஒரு லீற்றர் பாலினை கொள்வனவு செய்வதற்கே அனுமதித்துள்ளது.

எனினும் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பாலினைக் கொள்வனவு செய்கின்ற பால் விநியோகஸ்தர்கள் ஒரு லீற்றர் பாலினை 59 ரூபாவுக்கே விநியோகிக்கின்றனர்.

இந்த நிலைமைக் காரணமாகவே தொடர்ந்து அரசாங்கத்தின் கொள்கைக்கேற்ப பாலினைப் பெற்று பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அம்பகமுவ பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply