ஆளில்லா விமான தாக்குதலில் 10 ஆயுததாரிகள் பலி

பாகிஸ்தானின் வடமேற்கு பிராந்தியத்தில் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் நடத்திய தாக்குதலில் சந்தேகத்திக்கு இடமாக 10 ஆயுததாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானுக்கான விநியோக மார்க்கங்களை தடைசெய்துள்ள பாகிஸ்தானுடன் பதற்றத்தை இவ்வாறான தாக்குதல்கள் அதிகரிக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதே பகுதியில் நேற்றைய தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு சந்தேகத்திற்கிடமான ஆயுததாரிகள் கொல்லப்பட்டிருந்தனர்.

வடக்கு வசிரிஸ்தான் பகுதியிலுள்ள ஹக்கானி ஆயுததாரிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமெரிக்கா பாகிஸ்தானை வலியுறுத்தி வருகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply