தலிபான் தீவிரவாதிகள் விஷவாயு அடித்ததில் 120 பள்ளிச் சிறுமிகள் மயக்கம்
ஆப்கானின் தஹார் மாகாணத்தில் பீபி ஹாஜி என்ற பள்ளிக்கூடத்தில் உள்ள வகுப்பறைகளில் தலிபான் தீவிரவாதிகள் விஷவாயுவை ஸ்பிரே செய்துள்ளனர். இதனை சுவாசித்த மாணவிகள் தலைசுற்று மற்றும் தலைவலியால் பாதிக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி மயக்கமும் அடைந்தனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விஷவாயு தாக்குதலில் 120 பள்ளிச் சிறுமிகள் மயக்கமடைந்தனர். அவர்களில் 90 பேர் சிகிச்சைக்குப் பிறகு தற்போது வீடு திரும்பியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட 3 ஆசிரியைகள் உட்பட 30 பேர் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பெண்களுக்குக் கல்வி என்பதை கடுமையாக எதிர்த்து வரும் பிற்போக்கு அராஜகவாத தாலிபான் குழு நடத்தும் இரண்டாவது விஷத்தாக்குதலாகும் இது.
2014ஆம் ஆண்டு அமெரிக்க, நேட்டோ படைகள் அங்கிருந்து வெளியேறும் போது பெண்கள் கல்வி நிலையம் எதுவும் இருக்கக்கூடாது என்று உத்தரவு போட்டுள்ளது தாலிபான்.
இதுவரை 600 பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இதே மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் குடிநீர் அருந்திய மாணவிகள் 100 பேருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply