17 சீனப் பிரஜைகளை நாடுகடத்துவதற்கு தீர்மானம்
நிதிமோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பில் 17 சீனப் பிரஜைகளை நாடுகடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
இணையதளம் ஊடான நிதிமோசடியில் ஈடுபட்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா குறிப்பிட்டார்.
இந்த சீன பிரஜைகளை கறுப்புப் பட்டியலில் உள்ளடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கொழும்பில் அலுவலகமொன்றை நடத்திவந்ததுடன், சீனாவிலுள்ள ஒருவரின் வங்கிக் கணக்குகளின் மூலம் இந்த 17 சீனப் பிரஜைகளும் பணம் பெற்றுவந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்தே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply